
Labels:
சாகசம்

“தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.
இதற்கு துணைபுரியும் வகையிலேயே www.ltteir.org என்ற இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மேலும், மக்களோடு நெருங்கித் தொடர்பு கொள்ளும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனுக்கு என பிரத்தியேகமாக - ‘பத்மநாதன் பக்கங்கள்’ எனும் ஒரு சிறப்புத் தொடர்பாடல் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு - வாரம் தோறும் - சனிக்கிழமைகளில் தமிழிலும் புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்தாடல்கள் மேற்கொள்வார்” எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 மார்ச் முடிவில் நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் 2,221.9 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டுப் பண்ட உற்பத்தியின் 22 சதவீதமாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2008-09ல் நாட்டின் கடன் 530 கோடி (2.4 சதவீதம்) டாலர் அதிகரித்தது. வர்த்தக நிலுவையே இதன் பிரதான காரணமாகும்.
2009 மார்ச் முடிவில் நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்புகள் வெளிநாட்டுக்கடனின் 109.6 சதவீதத்திற்குப் பாதுகாப்பு அளித்தன. (2008 மார்ச் முடிவில் இது 137.9 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது)
அதிகக்கடன்பட்டுள்ள 20 நாடுகளின் வெளிநாட்டுக்கடன் பற்றிய சர்வதேச மதிப்பீட்டில் 2007ல் இந்தியா அதிகக் கடன்பட்டுள்ள 5வது நாடாக இருந்தது.
கடன் செலுத்தப்படும் தகவு கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து, 2009 மார்ச் முடிவில் 4.6 சதவீதமாக இருந்தது. 2008 மார்ச் முடிவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அந்நியக்கடன் ரூ.1870 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
‘சென்னை வாழ்க்கையில் ஒருநாள்’ என்ற விளம்பரப் படத்துக்கு இந்தியாவிற்கு முதன் முதலாக ‘தங்கச் சிங்கங்கள் விருது’ கேன்ஸ் விழாவில் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்காக 2 விருதுகளும் மேலும் ஒரு விருதும் இதனைத் தயாரித்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
2008ல் கேன்ஸ் விழாவில் 23 பதக்கங்களை வென்ற இந்தியா தற்பொழுது 2008ற்கான 25 பதக்கங்களை பெற்றுள்ளது. விளம்பரப் படங்கள் தேர்வுக் குழு மற்றும் தலைவரான டேவிட் லுபார்ஸ் சென்னைப் படத்தின் பாட்டை மிகச் சிறப்பாக பாராட்டியுள்ளார்.
இதுபோன்று எந்தப் பாடலிலும் காணமுடியாது என்று அவர் கூறியுள்ளார். நீதிபதிகள் குழு உறுப்பினரான ஆண்டிரியா ஸ்டில்லாசி, இந்தப் படத்தின் பாடல் தன்னை அதிரவைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் சமூக வாழ்க்கை, அரசியல் மற்றும் இசையைக் கொண்டு வந்தது பெரும் வியப்புக்குரியது என்று அவர் குறிப்பிட்டார். இந்த விளம்பரப் படம் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ சென்னைப் பதிப்புக்காக தயாரிக்கப்பட்டது.
சென்னையின் கட் அவுட் கலாச்சாரம், சூப்பர் ஸ்டார், சினிமா நடிகர் ஹீரோவாவது பின்பு ஜீரோவாவது ஆகியவற்றை ஒரே ஒரு நிமிடத்தில் காண்பிக்கும் இப்படத்தின் அடித்தளமாக அமைந்த அந்தப் பாட்டு ‘நாக்க முக்க’.
கொழும்புவில் ஒரு மூத்த ‘இன்டர் நியூஸ்’ பெண் பத்திரிகையாளர் கடந்த புதனன்று கடத்தப்பட்டு, பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் 45 நிமிட விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் ஊடக சமுதாயத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் அமைந்துள்ள ‘இன்டர் நியூஸ்’ அரசு சார்பற்ற ஒரு சர்வதேச சுதந்திரமான ஊடகமாகும். உலகெங்கும் இது தகவல்களைப் பரப்புகிறது. கொழும்பில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் நிருபர் கிருஷ்ணி இஃபாம் 13 ஆண்டுகளாக இந்தப் பணியில் இருந்து வருகிறார்.
கொழும்பு நகரின் எல்லையில் அடையாளம் தெரியாத நபர்கள் இவரைக் கண்ணைக் கட்டிக் கடத்தி சென்று 3 மணிநேரப் பயணத்திற்குப் பின் கண்டி நகருக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்.
அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப்பின் அவர் எழுதிய கட்டுரைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டுள்ளனர். ‘வீரகேசரி’ பத்திரிகையின் முன்னாள் நிருபரான இவரைப் பின்னர் கண்டி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டுப் பயணச் செலவுக்காக ரூ.200ஐ கையில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இவர், தான் கடத்தப்பட்டதைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் ஞாயிறு மாலை வரையில் இவரைக் கடத்தியவர்களைக் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு பத்திரிகையாளர் கடத்தப்படுவது கொழும்பில் இது இரண்டாவது முறையாகும்.
உலகில் லஞ்ச ஊழல் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. நமது நாட்டில் உள்ள மத்திய புலனாய்வுக் குழு இந்த லஞ்ச ஊழல்களை வெளிக்கொண்டு வருவதற்கு, அம்பலப்படுத்துவதற்கு எத்தகைய வகையில் செயலாற்றுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
போலிச் சாதிச்சான்றிதழ்கள் வாங்குவது முதல் இந்திய ராணுவத்திற்குத் தளவாடங்கள் வாங்குவது வரை ஊழல் எங்கும் மலிந்திருக்கிறது. ஊழல் குற்றவாளிகள் அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ளனர். வருமானவரித் துறை, இந்தியத் தொலைக்காட்சி, பாதுகாப்புத்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் டில்லி, ம.பி., உ.பி., மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம், ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், நாகலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் என்று பரவிக் கிடக்கிறார்கள்.
இந்திய ராணுவத்துறையில் நடைபெற்ற ஒரு ஊழல் பற்றிச் சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இது காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் முள்வேலி போடுவதற்கான இரும்பு முள்கம்பி வாங்கியதில் நடைபெற்ற முறைகேடாகும். ரூ.12.5 கோடி மதிப்புள்ள முள்கம்பிகள் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
டெண்டர் விடுவதைத் தவிர்க்கவே இவ்வாறு கூறப்பட்டது. உண்மையில் அந்த முள்கம்பி ஜம்முவில் கங்கையாளில் உள்ள சிவா ஸ்டீல் அண்டு ஒயர் என்ற சிறிய நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போலிச் சாதிச்சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசுப் பணிகளைப் பெற்றதாக டில்லியில் எட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
போலிச் சாதிச்சான்றிதழ்கள் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பலர் பணிக்குச் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வருமானவரித் துறை, தொலைக்காட்சி நிலையம், டில்லி குடிநீர் வாரியம், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் திடீர்ச் சோதனை நடத்தியதில் சி.பி.ஐ. ரூ.25 லட்சம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியது.
டில்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றிய மூன்று இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 2003-05 ஆண்டுகளில் ஒப்பந்தக்காரர் லாபமடையும் வகையிலும் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி நட்டம் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டிருந்தது.
அவர்களுடைய வங்கி லாக்கர்களைச் சோதனையிட்டதில் ஒரு லாக்கரில் ரூ. 97 ஆயிரம் ரொக்கம், 10 தங்கக் கட்டிகள், 29 தங்கக் காசுகள் மற்றும் 810 கிராம் தங்க நகைகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 60 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் 7 பொறியாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அனுமதியில்லாமல் கட்டடம் கட்ட அனுமதி தந்ததாக நிர்வாகப் பொறியாளர் பி.எஸ்.யாதவ் மீது புகார் வந்ததையட்டி அவர் வீடு சோதனையிடப்பட்டது. 12 அசையாச் சொத்துக்கள் வாங்கியுள்ளதற்கான பத்திரங்களும், ரூ. 8 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது; இன்னொரு பொறியாளர் அனில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியுள்ளதற்கான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த சில நாட்களில் மட்டும் 69 லஞ்ச ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு சாதாரண குடிமகன் ஊழல் செய்தால் செல்பேசிக் குறுஞ்செய்தி மூலம் நாடு முழுவதும் அந்தச் செய்தி பரவுகிறது. பெரிய இடத்தில் உள்ள பெரிய அளவிலான ஊழல்களை மக்கள் மத்தியில் சி.பி.ஐ. வெளியிடுவது இல்லை. இது ஏன் என்பதுதான் புரியவில்லை.