Wednesday, May 21, 2008

11 முட்டாள்களும்; 11,000 முட்டாள்களும்; இழப்பு யாருக்கு

கிரிக்கெட் ஓர் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு. இங்கிலாந்திலிருந்த பிரபுக்கள் பொழுது போக்கத் தொடங்கிய விளையாட்டு. இங்கிலாந்துப் பேரரசின்கீழ் அடிமைப்பட்டிருந்த நாடுகளில் புகுத்தப்பட்ட விளையாட்டு.

நாம் இங்கிலாந்திற்கு ஆட்பட்டிருந்த காலத்தில் ஆங்கிலத்தைப் போன்றே மிகுந்த ஈடுபாட்டோடு கிரிக்கெட்டையும் கற்றோம். அவர்கள் பாராட்டுகின்ற அளவிற்கு திறமையும் பெற்றோம்.

“இருபதுக்கு இருபது என்ற கிரிக்கெட் போட்டி மூலம் மக்களின், குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களான வளமுடைய இளைஞர்களை நடுத்தர மக்களை வாடிக்கையாளர்களாக்கி வாணிபக் கொள்ளையிட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் முற்றுரிமை பெற்ற பெரிய பொது நிறுவனம் என்ற அடிப்படையில் வருவாய் நோக்கில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றது.

இதற்கு ஒரு சோதனையாக இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வேறு சில வளமும் புகழும் பெற்றவர்களோடு சேர்ந்து இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற அமைப்பினைத் தொடங்கி கிரிக்கெட் போட்டிகளை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நிலைதடுமாறிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் இருபது இருபது என்ற உலகப் போட்டியை நடத்தினர். இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றம் நிகழ்ந்தது.

முதலில் கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி என்றால் நாள்கணக்கில் நடைபெறும். ஓரணி அடுத்த அணிவீரர்கள் அனைவரையும் வீழ்த்த வேண்டும். ஆட்டம் சில வேளைகளில் நாட்கணக்கில் நடைபெறும்.

இதனை ஒருகூட்டம் கண்டுகளிக்கும். இந்த நிலையில்தான் பெர்னாட்ஷா இதனை சோம்பேறிகளின் ஆட்டமென்று கூறி 11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் பார்க்கின்றனர் என்று கிண்டலடித்தார்.

15 பின்னூட்டங்கள்:

ஜிம்ஷா said...

படிப்பவர்கள் தயவு செய்து ஒருவரியாவது பின்னூட்டம் எழுதுங்கள். அப்பொழுதுதான் யாரு படிக்கிறா என தெரியும். நானும் வந்து படித்து பின்னூட்டம் இடுவேன். வாங்க சீக்கிரம்.

கிரி said...

கிரிக்கெட் விளையாட்டு என்பதில் இருந்து மாறி வியாபாரமாகி விட்டது.

இன்னும் கொஞ்ச காலங்கள் சென்றால் 10 ஓவர் கிரிக்கெட் எல்லாம் வருமோ என்னவோ !!!

தியாகு said...

''பெர்னாட்ஷா இதனை சோம்பேறிகளின் ஆட்டமென்று கூறி 11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் பார்க்கின்றனர் என்று கிண்டலடித்தார்''
கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது . கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே .

தியாகு said...

கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது . கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே .

ஜிம்ஷா said...

/// கிரி said...
கிரிக்கெட் விளையாட்டு என்பதில் இருந்து மாறி வியாபாரமாகி விட்டது.

இன்னும் கொஞ்ச காலங்கள் சென்றால் 10 ஓவர் கிரிக்கெட் எல்லாம் வருமோ என்னவோ !!!///

கண்டிப்பாக. இதிலென்ன சந்தேகம்.

ஜிம்ஷா said...

/// தியாகு said...
''பெர்னாட்ஷா இதனை சோம்பேறிகளின் ஆட்டமென்று கூறி 11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் பார்க்கின்றனர் என்று கிண்டலடித்தார்''
கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது . கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே.///

என்னது. இதனை கால்பந்தாட்டத்திற்கு சொன்னாரா பெர்னாட்ஷா. இதுக்குதான் அரைகுறையாக படித்துவிட்டு பதிவு போடக்கூடாது போலிருக்கு. சரிங்க தியாகு திருத்திக் கொள்கிறேன்.

ஜிம்ஷா said...

/// தியாகு said...
கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது . கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே.///

ஆமாம். இதில் ஒன்றும் குறைச்சலில்லை. காசுகொடுக்காம போய் பொழுதுபோக்கமுடியுமா? அங்கு பதிக்கப்பட்டுள்ள விளம்பரங்களை காணாமல் வரமுடியுமா?

ஜிம்ஷா said...

/// ஜிம்ஷா said...
படிப்பவர்கள் தயவு செய்து ஒருவரியாவது பின்னூட்டம் எழுதுங்கள். அப்பொழுதுதான் யாரு படிக்கிறா என தெரியும். நானும் வந்து படித்து பின்னூட்டம் இடுவேன். வாங்க சீக்கிரம்.///

இந்த பின்னூட்டத்திற்கு 4 பின்னூட்டங்களா!?

சினிமா நிருபர் said...

11000 முட்டாள்கள் இல்லை 11 லட்சம் முட்டாள்கள்...!

ragina amma said...

''பெர்னாட்ஷா இதனை சோம்பேறிகளின் ஆட்டமென்று கூறி 11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் பார்க்கின்றனர் என்று கிண்டலடித்தார்''
கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது

ragina amma said...

ஆமாம். இதில் ஒன்றும் குறைச்சலில்லை. காசுகொடுக்காம போய் பொழுதுபோக்கமுடியுமா? அங்கு பதிக்கப்பட்டுள்ள விளம்பரங்களை காணாமல் வரமுடியுமா?
yessssssss

ஜிம்ஷா said...

/// சினிமா நிருபர் said...
11000 முட்டாள்கள் இல்லை 11 லட்சம் முட்டாள்கள்...!///

இன்னும் அதிகமா இருக்கும் நிருபர். அங்கே நடிகைகளை பேட்டி எடுக்க போகலியா. இந்த பக்கம் காத்தடிக்குது.

ஜிம்ஷா said...

/// ragina amma said...
''பெர்னாட்ஷா இதனை சோம்பேறிகளின் ஆட்டமென்று கூறி 11 முட்டாள்கள் விளையாட 11,000 முட்டாள்கள் பார்க்கின்றனர் என்று கிண்டலடித்தார்''
கால்பந்து ஆட்டம் பற்றி பெர்னாட்ஷா சொன்ன கருத்து இது///

சரிங்க கவனிக்காம சொல்லிப்போட்டேன்.

ஜிம்ஷா said...

/// ragina amma said...
ஆமாம். இதில் ஒன்றும் குறைச்சலில்லை. காசுகொடுக்காம போய் பொழுதுபோக்கமுடியுமா? அங்கு பதிக்கப்பட்டுள்ள விளம்பரங்களை காணாமல் வரமுடியுமா?
yessssssss///

என்ன வெறும் எஸ் மட்டும்தானா?

தமிழகத்தின் தலைவன் அழைக்கிறான் புதுக்கோட்டைக்கு! said...

http://mohideen44.blogspot.com/